Published : 01 Jan 2021 07:55 AM
Last Updated : 01 Jan 2021 07:55 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி யில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, மண்டலவாடி ஊராட்சி செயலாளர் செல்வகுமார் (38) என்பவர் கவுண்டப்பனூர் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க இடம் தேர்வு செய்ய நேற்று முன்தினம் மாலை தனது அலுவலக ஊழியர்களுடன் அங்கு சென்றார்.
அப்போது, அரசுக்கு சொந்த மான இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க இடம் தேர்வு செய்து கொண்டிருந்தபோது, அதேபகுதி யைச் சேர்ந்த விவசாயி குமார் (52) என்பவர் அங்கு வந்தார்.
ஊராட்சி செயலாளர் செல்வ குமாரிடம், ஆழ்துளைக் கிணறு அமைக்க நீங்கள் தேர்வு செய் துள்ள இடம் எனக்கு சொந்தமான பட்டா நிலம் எனவே, வேறு இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விவசாயி குமார், ஊராட்சி செயலாளர் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில், விவசாயி குமார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT