Regional04
வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு கேட்டு பேரூராட்சி அலுவலரிடம் பாமகவினர் மண்டியிட்டு மனு
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமகவினர் பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம் மண்டியிட்டு நேற்று மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் நேற்று பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, மாவட்ட மகளிரணிச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் முன்னிலை வகித் தார்.
வெள்ளைபிள்ளையார் கோயில் முன்பு தொடங்கிய பேரணி, கடைவீதி வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு பேரூராட்சி நிர்வாக அலுவலர் உஷாவிடம், பாமகவினர் மண்டியிட்டு மனு அளித்தனர்.
