Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM
பெரம்பலூர்: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைனில் விநாடி-வினா போட்டி டிச.30-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படும் செஞ்சுருள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் பங்கு பெறலாம்.
எச்ஐவி, எய்ட்ஸ், பால்வினை நோய், ரத்ததானம் மற்றும் கரோனா ஆகிய தலைப்புகளில் விநாடி-வினா போட்டிக்கு கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், அடுத்த 8 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை (டிச.25) மாலை 5 மணிக்குள் quiz.tnsacs.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT