Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி யாத்திரை

சென்னை

ஊழலுக்கு எதிரான சிந்தனையை தமிழக மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சி, ‘துடைப்பம்’ யாத்திரையை சென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் தமிழக தலைவர் வசீகரன் தலைமையில் ஊழலுக்கு எதிரான துடைப்பம் யாத்திரையை சென்னை மின்ட் பகுதியில் நேற்று தொடங்கினர்.

இதுதொடர்பாக வசீகரன் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. அதற்கான பிரச்சார பணியை தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு கிளையிலும் ஆம்ஆத்மி கட்சி சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் மக்களின் பிரச்சினையை தீர்க்க பணியாற்றி வருகிறோம்.

தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். இந்த தேர்தல் எங்கள் கட்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது. அதனால், வீடுதோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளோம். ஊழலுக்கு எதிரான சிந்தனையை மக்களிடம் ஏற்படுத்தவும், எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லவும் ‘துடைப்பம்’ யாத்திரையை தொடங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x