Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM
கோவை துடியலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவருபவர் மகாராஜன் (29). துடியலூர் அரசு மருத்துவமனை அருகே, நேற்று முன்தினம் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 3 பேரை கலைந்து செல்லுமாறு மகாராஜன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூவரும், மகாராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கினர். இதில் ரத்தக் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துடியலூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காவலரை தாக்கிய மூவரையும் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி பாலகிருஷ்ணன்(35), அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மணிரத்தினம்(25), வடமதுரையைச் சேர்ந்த அஸ்வின்(20) எனத் தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT