Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
சிவகங்கை மாவட்டத்தில் மழைக் காலத்திலும் வைகை ஆற்றில் நிலத்தடி நீர் உயராததால் 152 கிராமங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 152 கிராமங்களுக்காக வைகை ஆற்றில் 13 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்கு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும். தொடர் வறட்சியால் வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் அதலபா தாளத்துக்குச் சென்றுவிட்டது. தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தபோதிலும், தொடர்ந்து மணல் கொள்ளையால் நீரின் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டு, வைகையில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால் 152 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, பல கிராமங்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
இதுகுறித்து விவசாயப் பிரதிநிதி எம்.எஸ்.கண்ணன் கூறியதாவது: வைகை ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டால் நீரின் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரவலாக மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில்லை. மேலும் குடிநீர் திட்டக் குழாய்கள், மோட்டார்களை முறையாக பராமரிக்கவில்லை.
இதனால் ஆற்றை யொட்டியுள்ள கிராமங்களுக்கே தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. கடைநிலை கிராமங் களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட செல்வதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காத கிராமங்களில் மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT