Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

பாம்பன் ரயில் பாலப் பணி வரும் மார்ச்சுக்குள் முடிக்கப்படும் : தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் உறுதி

மதுரை

பாம்பன் ரயில் பாலப் பணிகள் 2022 மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.

மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் நேற்று `அப்லைனில்’ பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார். முன்னதாக மதுரை ரயில் நிலையத்தில் நவீன சிக்னல், முதலாவது நடை மேடை யிலுள்ள பயணிகள் வசதி மற்றும் நடைமேம்பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

ரயில்நிலைய புதிய கட்டிட பணித் திட்டங்களை சிறப்பு வீடியோ திரை மூலம் ஆய்வுசெய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை களை வழங்கினார். பின்னர் பொதுமேலாளர் ஜான்தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை ரயில் நிலையத்தில் புதிய இரண்டடுக்கு கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்துக்குச் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டப் பணியும் மேற்கொள்ளப்படும்.

கரோனா தொற்றுக்கு முன்பு இயங்கிய பயணிகள் ரயில் கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படும். மதுரை ரயில் நிலையத்தை விமான நிலை யத்துக்கு இணையாகப் புதுப் பிக்கும் பணிக்காக டிசம்பரில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இந்தப் பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். பாம்பன் ரயில் பாலப் பணியை 2022 மார்ச்சுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மதுரை-நெல்லை இடையே இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒமைக்ரான் பாதிப்புகளைப் பொருத்து பயணிகள் ரயில் இயக்குவது குறித்து முடிவெடுக் கப்படும். இவ்வாறு அவர் கூறி னார். ஆய்வின்போது ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை ரயில் இயக்க மேலாளர்  குமார், முதன்மை பொறியாளர் பிரபுல்ல வர்மா ஆகி யோர் கலந்துகொண்டனர்.

ரயில் இயக்கம், வர்த்தகம், சிக்னல், மருத்துவமனை மின் மயமாக்கல் பிரிவுகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டி குழு விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x