Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM
கும்பகோணம்: கும்பகோணம்-எரவாஞ்சேரி இடையே பேருந்து சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரிக்கு திருவிடைமருதூர், ஆடுதுறை, ஆவணியாபுரம், மஞ்சமல்லி, எஸ்.புதூர், வடமட்டம் வழியாக இயங்கும் பேருந்து சேவையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் நேற்று எஸ்.புதூரிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, வணிக துணை மேலாளர் பி.கணேசன், உதவி மேலாளர் நடராஜன், உதவி பொறியாளர் ராஜ்மோகன், கும்பகோணம் கிளை மேலாளர் மதன்ராஜ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேருந்து கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரிக்கு காலை 6.25 மணி, மாலை 4.40 மணிக்கும், எரவாஞ்சேரியில் இருந்து கும்பகோணத்துக்கு காலை 8.10 மணி, மாலை 5.55 மணிக்கும் இயக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT