Published : 11 Dec 2021 03:11 AM
Last Updated : 11 Dec 2021 03:11 AM

மகளிர் குழு தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய பதிவு செய்ய அழைப்பு : சேலம்: மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு பதிவு செய்து, விற்பனை வாய்ப்பை பெறலாம், என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். :

இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்ட மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான கண்காட்சி நடத்தி பல்வேறு விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரப்படுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய தீர்மான நகல், உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதார் அட்டை, உற்பத்தி பொருள் குறித்த ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பதிவு சான்று, உற்பத்தி மற்றும் விற்பனை செலவினம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரத்துடன் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), அறை எண் : 207 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம் ,சேலம் என்ற முகவரியில், பதிவு செய்து கொண்டு விற்பனை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x