Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM
கோவை மாநகரிலுள்ள சோதனைச் சாவடிகளில், அதிக நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாநகர காவல்துறையின் சார்பில், மாநகரிலுள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பொது இடங்களில் என 560-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கேமராக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கவும், சாலை போக்குவரத்து விதிகளை மீறும்வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் இவை உதவு கின்றன.
மாநகர காவல்துறை எல்லையில் 16 சோதனைச் சாவடிகள்உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் கண் காணிப்பு கேமராக்கள் உள்ளன.
இவற்றால் வேகமாக செல்லும் வாகனங்களின் எண்களையும், அதில் பயணிப்பவர்களையும் துல்லியமாக கண்டறிய முடியாத நிலை உள்ளது.
எனவே, மாநகரில் போக்கு வரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் எனப்படும்அதிநவீன துல்லிய கேமராக்களை,சோதனைச் சாவடிகளிலும்பொருத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநகர காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது,‘‘ மாநகரிலுள்ள சில சோதனைச் சாவடிகளுக்கு 2 கேமராக்கள் இருந்தால் போதும், அதுவே பிரதான சாலைகளை மையப்படுத்தி அமைந்துள்ள சில சோதனைச் சாவடிகளுக்கு குறைந்தபட்சம் 4 கேமராக்கள் தேவைப்படும்.
ஒவ்வொரு சோதனைச் சாவடிக்கும் எவ்வளவு ஏ.என்.பி.ஆர் எனப்படும் அதிநவீன கேமராக்கள் தேவை என சர்வே செய்யப்பட்டு வருகிறது.
சர்வே முடிந்ததும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். அதைத் தொடர்ந்து காவல்துறை நிதி அல்லது தன்னார்வ அமைப்புகளின் நிதயுதவிகளுடன் இந்த கேமராக்கள் கொள்முதல் செய்து விரைவில் பொருத்தப்படும்.
இக்கேமராக்களை பொருத்து வதன் மூலம் சோதனைச் சாவடியை கடக்கும் நபர்களின் வாகனங்கள், அதிலுள்ள நபர்களின் புகைப்படங்கள் துல்லியமாக பதிவாகும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT