Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM

 சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (8-ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

 சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (8-ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மின் நிலையத்துக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, ஹவுசிங்போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்ப நாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, ராஜாராம் நகர், சங்கர் நகர், நால்ரோடு, மிட்டாபெரியபுதூர், சாரதா கல்லூரி சாலை, அழகாபுரம், செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, ஏற்காடு ஆகிய இடங்களில் இன்று (8-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று சேலம் கிழக்குக் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

 குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில் இன்றும் (8-ம் தேதி), பல்லக்காபாளையத்தில் நாளையும் (9-ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது, என பள்ளிபாளையம் மற்றும் சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் இன்று (8-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி சாலை அக்ரஹாரம், பவானி சாலை, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லக்காபாளையம்

 குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (9-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x