Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக சரிவு :

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று 19 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 5-ம் தேதி காலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 19 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. பின்னர், 6-ம் தேதி இது விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக சரிந்த நீர்வரத்து மாலையில் 17 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x