Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞர் கைது :

நாமக்கல்: முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த பட்டதாரி இளைஞரை பள்ளிபாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.

பள்ளிபாளையம் - ஆவாரங்காடு பிரிவு சாலையில் நேற்று அதிகாலை முதியவரை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற நபர்களையும் அவர் தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த முதியவரை அப்பகுதியினர் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்த முதியவர் வேலப்பன் (65) என்பது தெரிந்தது. மேலும், அவரை தாக்கியவர் திருச்செங்கோடு குமாரமங்கலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுலநந்தா (23) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் டீ குடிக்க பணம் தராததால் முதியவரை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கோகுலநந்தாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x