Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டத்தின் கீழ் 225 ரூபாய் மானிய விலையில் மாடித்தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.15-க்கு 12 வகையான காய்கறி விதைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துகளை வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாடித்தோட்டம், காய்கறி விதை, ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று தொடங்கி வைத்து 150 பயனாளிகளுக்கு ரூ.53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் தோட்டம், மாடித்தோட்டம், காய்கறி தோட்டம், பழங்கள், மூலிகைப்பயிர்கள் உள்ளிட்ட பயிரிட்டு பயன்பெறும் விதமாக தமிழக அரசு இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
நகர் புற மக்கள் பயனபெறும் வகையில் ரூ.6.75 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாடித்தோட்டம் அமைக்க 6 வகையான காய்கறி விதைகள், 6 செடி வளர்க்கும் பைகள், 2 கிலோ தென்னை நார் கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100 மி.லிட்டர் இயற்கை பூச்சிக்கொல்லி ஆகிய இடுபொருட்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.900 மதிப்பிலான பொருட்கள் ரூ.225-க்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. 12 வகையான காய்கறி விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெற வேண்டும். இத்திட்டம் மூலம் சுமார் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டம் சார்பில் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் என மெத்தம் 7,500 பயனாளிகளுக்கு ரூ.10.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகுமார், சார் ஆட்சியர் பானு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பாத்திமா, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிர காசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், வேளாண் இணை இயக்குநர் முருகன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் சிதம்பரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT