செவ்வாய், டிசம்பர் 24 2024
Last Updated : 04 Dec, 2021 03:09 AM
Published : 04 Dec 2021 03:09 AM Last Updated : 04 Dec 2021 03:09 AM
பழநி: பழநி நகர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிபவர் ஆனந்தன். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, சாமிநாதபுரம் பிரிவு மின்வாரியத்தில் களப்பணியாளராக பணிபுரியும் சரவணன் என்பவர் போதையில் தகராறு செய்துள்ளார். அப்போது உதவி செயற்பொறியாளர் ஆனந்தனை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். அங்கு பணியில் இருந்த சக ஊழியர்கள் சரவணனைத் தடுத்தனர். இதுகுறித்து பழநி காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
இதைக் கண்டித்து நேற்று மின்வாரிய ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT