Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM
ஓசூர்
ஓசூர் கோட்டம் ஓசூர் மின்நகர் துணை மின்நிலையம், ஓசூர் துணை மின்நிலையம், சிப்காட்-2 துணை மின்நிலையம், ஜுஜுவாடி துணை மின்நிலையம், கெம்பட்டி துணை மின் நிலையம் ஆகியவற்றில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (4-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஓசூர் மின்நகர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப் பள்ளி, புதிய பேருந்து நிலையம், அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். ஓசூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட டிவிஎஸ்நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், கொத்தகண்டப்பள்ளி, பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
சிப்காட் – 2 துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சிப்காட் பகுதி -2, பத்தலப்பள்ளி, எலக்ட்ரானி்க் எஸ்டேட், மோர்னப்பள்ளி, ஆலூர். புக்கசாகரம், கதிரேப்பள்ளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஜுஜுவாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஜுஜுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, பேடரப்பள்ளி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும், கெம்பட்டி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட கெம்பட்டி, பேளகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, ஜவளகிரி, கெம்பத்தப்பள்ளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது, என ஓசூர் கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT