Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM

தூத்துக்குடியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அறிவிப்பு :

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 01.12.2021 முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.964, கோவில்பட்டியில் ரூ.962.50 கழுகுமலையில் ரூ.971, கயத்தாறில் ரூ.974, எட்டயபுரத்தில் ரூ.962.50 மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.981 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.964 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.964 எனவும் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு (14.2 கிலோ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x