Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் காமராஜர் சமூக நல அறக்கட்டளை சார்பாக மருத்துவ அலுவலர்கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். மேலும், அப்பகுதி மக்கள் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் எஸ்பி பேசும்போது, “அவசர சிகிச்சை தேவைப் படுபவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இந்த ஆம்புலன்ஸ் சேவை பேருதவியாக இருக்கும். அதேபோன்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மக்கள் முன்வரவேண்டும்” என்றார்.
ஏற்பாடுகளை காமராஜர் சமூக நல அறக்கட்டளை சார்பாக கரிக்கோல்ராஜ், மகேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT