Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM

கோவில்பட்டியில் டிச. 16 முதல் 25 வரை - தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி :

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் 11-வது தேசிய ஜூனியர்ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல் வெளி மைதானத்தில் டிசம்பர் 16-ம்தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகளின் சேர்மன்கனிமொழி எம்பி நேற்று கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 540 வீரர்களுக்கு மேல் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

தமிழ்நாடு அணியிலும் கோவில்பட்டியை சேர்ந்த 8 பேர் உள்ளனர். இங்கு நடைபெற உள்ளபோட்டிகள் மாணவர்கள், இளம்பெண்கள், இளைஞர்களுக்கு உத்வேகமாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x