Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

நெல்லையில் தனிஷ்க் புதிய ஷோரூம் திறப்பு :

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் அருகே தனிஷ்க் புதிய விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

டைட்டன் நிறுவன தென்மண்டல வர்த்தக பிரிவு தலைவர் சரத் தொடங்கி வைத்தார். மண்டல வணிக மேலாளர் நரசிம்மன், ஏரியா வணிக மேலாளர் வசந்த், திருநெல்வேலி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் குணசிங், ரோட்டரி மாவட்ட தலைவர் ஜெசிந்தா தர்மா, தனிஷ்க் ஜூவல்லரி கட்டிட உரிமையாளர் ஜான் தங்கம், டாக்டர் காஞ்சனா சுரேஷ், முன்னாள் ரோட்டரி தலைவர் ஆறுமுகபாண்டியன், ரோட்டரி வரும் ஆண்டு ஆளுநர் முத்தையாபிள்ளை, சர்பராஜன் நிர்மலா, சாராள் தக்கர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் பல்வேறுதுறைகளில் சாதனைபடைத்த 12 பெண்களுக்கு `புதுமை பெண்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x