Published : 09 Nov 2021 03:09 AM
Last Updated : 09 Nov 2021 03:09 AM
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலையில் விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து பதிவானது. அன்று மாலை விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. அதேபோல, நேற்று காலை அளவீட்டின்போதும் விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக சரிந்திருந்த நீர்வரத்து, மாலை அளவீட்டின்போது விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT