Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

புதுச்சேரி டிஜிபி காலில் விழுந்து : வணங்கிய பாஜக எம்எல்ஏக்கள் :

தீபாவளி வாழ்த்து சொல்ல சென்ற புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் காவல்துறை டிஜிபி காலில் விழுந்து வணங்கினர். புதுச்சேரியில் தந்தை - மகனாக இருப்பவர்கள் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார் மற்றும் ரிச்சர்டு. தீபாவளியை யொட்டி இவர்கள் புதுச்சேரிகாவல்துறை டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணயாவை நேற்று சந்தித்து, இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணயாவின் காலில் ரிச்சர்டு விழுந்து ஆசி பெற்றார்.அவரை தொடர்ந்து தந்தையான ஜான்குமாரும் காலில் விழுந்து ஆசிபெற்றார்.

இதை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x