Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டது - நவ.1 என்பதே வரலாற்று உண்மை : கே.பாலகிருஷ்ணன், பழ.நெடுமாறன் கருத்து

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டது 1956 நவ.1 என்பதே வரலாற்று உண்மை என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழர் தேசியமுன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கே.பாலகிருஷ்ணன்: மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று 1938 முதல்கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. 1956 நவ.1-ம் தேதிசென்னை மாநிலம், கர்நாடகம்,கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து திமுக போராடிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட வேண்டுமென சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட்கள் வலுவாகக் குரல்கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தில் 1961-ல் சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றவேண்டுமென பி.ராமமூர்த்தி, சட்டதிருத்த மசோதாவை முதன்முதலில் கொண்டு வந்தார்.

இம்மசோதா விவாதத்துக்கு வரும் நேரத்தில், தோழர் பி.ராமமூர்த்தி கைது செய்யப்பட்டதால் இம்மசோதாவை முன்மொழிந்து மேற்கு வங்கத்தைச் சார்ந்த புபேஷ்குப்தா, நாடாளுமன்றத்தில் வாதாடினார். அண்ணா இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்தார். இறுதியில் 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும்‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம்செய்யப்பட்டது. எனவே, இந்த இருவரலாற்று நிகழ்வுகளை கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும்.

பழ.நெடுமாறன்: தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, இம்மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட நாள் நவம்பர் 1.புதிய தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடிய தலைவர் ம.பொ.சி. முதல் அனைத்துக் கட்சியினரும் நவம்பர் முதல் நாளை தமிழகம் அமைந்தநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

வரலாற்றுத் திரிபு..

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் நவம்பர் முதல் தேதியை கொண்டாடுகின்றனர். ‘சென்னை மாநிலம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றவேண்டும் என்று அன்றைய முதல்வர் அண்ணாசட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய நாளே ஜூலை 18. ‘தமிழ்நாடு பெயர்மாற்ற நாளாக’ அதைக் கொண்டாடுவதை விடுத்து, தமிழ்நாடு அமைந்த நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கூறுவது வரலாற்றுத் திரிபு ஆகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x