Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

விபத்துகள் இல்லாத, ஒலி குறைந்த - மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள் : கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் வேண்டுகோள்

‘விபத்து, கடுமையான ஒலியைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்தமாசற்ற தீபாவளியை கொண்டா டுங்கள்’ என்று கடலூர், விழுப்பு ரம் மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

இதுதொடர்பாக கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியன், விழுப்புரம் ஆட்சியர் மோகன், கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.  தர் ஆகியோர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பின் விவரம்:

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர்,காற்று உள்ளிட்டவை பெருமள வில் மாசுபடுகின்றன. பட்டாசுவெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால்சிறுகுழந்தைகள், வயதான பெரியோர் மற்றும் நோய்வாய் பட்டுள்ள வயோதிகர் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும் கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சர வெடிகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட் டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுவெடிப்பதை தவிர்க்க வேண்டும்.பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத் தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x