Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 5,6-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் 8-ம் தேதி முதல் கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளிகள் அரை நாள் செயல்படத் தொடங்கும். ஏற்கெனவே நவம்பர் 1-ம் தேதியன்று புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டது. நேற்று கல்லறைத் திருநாள் என்பதால் விடுமுறை விடப்பட்டது. மேலும், தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று (நவ. 3) புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT