Published : 03 Nov 2021 03:11 AM
Last Updated : 03 Nov 2021 03:11 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் தென்காசி மாவட்டம் சிவசைலம் அவ்வை ஆசிரம குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினர்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் தீபாவளி கொண்டாட்டத்துக்காக தென்காசி மாவட்டம் சிவசைலம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தின் சாந்தி செவித்திறன் குறைவுடையோர் பள்ளி மாணவ மாணவிகளுடன் கால்பந்து விளையாடினர். மேலும், மவுன நாடகம், நடனம், யோகா, குறுநாடகம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மாலையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகளால் தானமாக சேகரிக்கப்பட்ட சுமார் ரூ.35,000 மதிப்பிலான கல்வி உபகரணங்கள் மற்றும் சோப்பு, ஷாம்பு, பாய்கள், உணவு பொருட்கள், புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை சிவசைலம் அவ்வை ஆசிரமத்தின் செயலாளர் ரங்கனிடம் ஒப்படைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT