Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM
உதகை: கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனபாலை மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம். கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 45-க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். கோடநாடு வழக்கின் திருப்பமாக, சேலத்தில் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலையும், நண்பர் ரமேஷையும் கடந்த மாதம் 25-ம் தேதி போலீஸார் சேலத்தில் கைது செய்து, கூடலூர் சிறையில் அடைத்தனர். பின்னர் 28-ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை தனபால், உதகை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி தரன் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும், 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். நீதிபதி தரன், மீண்டும் 5 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT