Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் 67-வது பிறந்தநாள் வரும் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நவ.1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் ‘ஐயமிட்டு உண்’ திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலைநடந்தது. மக்களுக்கு உணவுவிநியோகம் செய்ய தயார் நிலையில் இருந்த 9 வாகனங்களை கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
அன்னதானம் வழங்கும் இந்த நிகழ்வு என் பிறந்தநாள் கொண்டாட்டம் அல்ல. இது ஓர் அரசியல் குறியீடு. அரசு செய்ய வேண்டியதை மக்கள் நீதி மய்யம் நினைவுபடுத்துகிறது.
நிரந்தரமாக ஏழைகளை பிணித்துக் கொண்டிருக்கும் நோய்ப் பசிக்கு உணவுதான் மருந்து. அதுகூட இல்லாமல் பலர் இருக்கின்றனர். இன்று நான் கொடியசைத்து வைப்பது அன்னக்கொடி. இந்த ஆண்டில் 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT