Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM
விழுப்புரம்/ கடலூர்/ கள்ளக்குறிச்சி
தலைமை தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி வருகிற 30-ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்ட வாரியாக நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டப் பணி மேற்கொள்வதற்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்காளர்பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மோகன் வெளியிட்டார்.
கடலூர் மாவட்டம்ஆண் பெண்திருநங்கைகள்மொத்தம்திட்டக்குடி (தனி)1,07,2601,11,776221,90,38விருத்தாசலம்1,25,4911,26,820312,52,342நெய்வேலி1,09,3041,09,502172,18,823பண்ருட்டி1,19,7211,26,407372,46,165கடலூர்1,15,4451,24,798682,40,311குறிஞ்சிப்பாடி1,19,7261,23,490252,43,241புவனகிரி1,23,5201,25,442262,48,988சிதம்பரம்1,22,2351,27,625242,49,884காட்டுமன்னார்கோவில் (தனி)1,13,7781,14,375152,28,168 கள்ளக்குறிச்சி மாவட்டம்ஆண் பெண்திருநங்கைகள்மொத்தம்கள்ளக்குறிச்சி (தனி)1,42,2811,44,878572,87,216சங்கராபுரம்1,33,4441,34,764482,68,256ரிஷிவந்தியம்1,35,8611,32,521582,68,395உளுந்தூர்பேட்டை1,48,1381,45,971482,94,157 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் விவரம்:விழுப்புரம் மாவட்டம்ஆண்பெண்திருநங்கைகள்மொத்தம்செஞ்சி1,29,2471,32,527392,61,813மயிலம்1,10,2261,10,805232,21,054திண்டிவனம் (தனி)1,13,8671,17,407102,31,284வானூர் (தனி)1,11,6381,15,835162,27,489விழுப்புரம்1,27,9041,34,356642,62,324விக்கிரவாண்டி1,16,2511,19,240272,35,518திருக்கோவிலூர்1,27,9201,26,747342,54,701 இதே போல் கடலூரில் ஆட்சியர் பாலசுப்பிர மணியம், கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தரன் ஆகியோர் வரைவு வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டனர்.
தொடர்ந்து இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்புகளில், “மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி நடைபெறுகிறது.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை வருகிற 30-ம் தேதி வரை தெரிவிக்கலாம். சிறப்பு முகாம்கள் 13, 14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
வாக்காளர் பட்டியல் பொதுமக்க ளின் பார்வைக்காக ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சிய்ர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நியமன வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும்.
வாக்காளர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்கள், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் தங்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண்.1950 ஐ தொடர்பு கொள்ளலாம்.
டிசம்பர் 20-ம் தேதி கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் நேற்றைய (நவ.1) நிலவரப்படி 8,37,053 ஆண்கள், 8,56,917 பெண்கள் 213 திருநங்கைகள் என மொத்தம் 16,94,183 வாக்காளர்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 10,90,484 ஆண் வாக்காளர்கள், 10,90,235 பெண் வாக்காளர்கள் மற்றும் 241 திருநங்கைகள் என மொத்தம் 21,46,960 வாக்காளர்கள் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 5,59,679 ஆண் வாக்காளர்கள், 5,58,134 பெண் வாக்காளர்களும், 211 இதர வாக்காளர்களும் என 11 லட்சத்து 18 ஆயிரத்து 024 வாக்காளர்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment