Published : 02 Nov 2021 03:12 AM
Last Updated : 02 Nov 2021 03:12 AM
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களுக்கு நேற்று பள்ளிகள் திறக் கப்பட்ட நிலையில், திருச்சி மாவட் டத்தில் பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவ- மாணவி களை இன்முகத்துடன், இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா பரவல் வெகுவாக குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலானவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
அதைத்தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலா னவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை ஆசிரியர்- ஆசிரியைகள் இன்முகத்துடன் இனிப்பு, பூங்கொத்து மற்றும் மலர்கள் வழங்கி வரவேற் றனர். பள்ளி நுழைவுவாயிலில் கிருமிநாசினி வைக்கப்பட்டிருந் ததுடன், வெப்பமானி கொண்டு அனைவரும் பரிசோதிக்கப்பட் டனர்.
திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியில் மேளதாளங்கள் முழங்க, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள் ளிட்டோர் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து, சாக்லெட் கொடுத்து வரவேற்றனர். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும் போது, “ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும், முதல் முறையாகவும் பள்ளிக்கு குழந்தைகள் வருவ தால், அவர்கள் கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் மன ரீதியாக தயார்படுத்த வேண்டும். இதையொட்டி, 2 வாரங்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு செயல்பாடுகளும், அதன்பிறகு, 2 மாதங்களுக்கு புத்தாக்க பயிற்சியும் வழங்கப்படும்” என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சீமானூர், மணவாளன் கரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆட்சியர் கவிதா ராமு தலைமை யில் அமைச்சர் எஸ்.ரகுபதி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோன்று, கந்தர்வக்கோட்டை அருகே புனல்குளம் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி களுக்கு வந்த மாணவர்களை அத் தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை வரவேற்றார்.
கரூர் காளியப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பூங்கொத்து, சாக்லெட் கொடுத்து வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எம்எல்ஏ ஆர்.இளங்கோ தேசிய கொடியை ஏற்றிவைத்து, மாணவ, மாணவிகளுக்கு பூங் கொத்து கொடுத்து வரவேற்றார். மாணவர்களை வரவேற்கும் விதமாக சீரியல் விளக்குகள், வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கார்ட்டூன் கதாபாத்திரங்களான மோட்டு, பட்லு வேடமணிந்தவர்கள் ஆடி, பாடி குழந்தைகளை மகிழ்வித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு நேற்று உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ, மாணவி களை மேளதாளம் முழங்க, ஆரத்தி எடுத்தும்,மலர்தூவியும், இனிப்பு கள் வழங்கியும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வரவேற்றனர்.
அரியலூர் மாவட்டம் அஸ்தினா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவி களுக்கு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில், மானோஜிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மலர்க்கொத்து கொடுத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் லெட்சுமிநாராயணா உதவி பெறும் பள்ளியில் எம்.பி எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா அரசு பள்ளி, நகராட்சி பள்ளி, சரஸ்வதி பாட சாலை, பாணாதுறை பள்ளி, நகர மேல்நிலைப் பள்ளிகளில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், பேராவூரணி அருகே பொன்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எம்எல்ஏ அசோக்குமார் உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுக்கு மலர்க ளையும், இனிப்புகளையும் கொடுத்து வரவேற்றனர். முதல் நாள் என்பதால் நேற்று அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன.
நாகை நெல்லுக்கடை நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி வரவேற்றார். பின்னர் வகுப்பறை களுக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் உரையாடினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல, மயிலாடுதுறை மாவட் டத்தில், மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT