Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM
ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் ஈரோடு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளித் தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஈரோடு ரயில் நிலையத்தில் வெளிமாநிலத்திற்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ரயில்வே காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பின்னர் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT