Published : 31 Oct 2021 03:12 AM
Last Updated : 31 Oct 2021 03:12 AM
கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டெம்போவை நிறுத்திய போது, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். டெம்போவில் 5 டன் ரேஷன் அரிசி இருந்தது. கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. ரேஷன் அரிசி, வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT