Published : 31 Oct 2021 03:12 AM
Last Updated : 31 Oct 2021 03:12 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் பன்னாட்டு மதச்சுதந்திர கூட்டமைப்பு, சர்வசமய கூட்டமைப்பு ஆகியவை சமய நல்லிணக்க தீபஒளி திருவிழாவை நடத்தின. பள்ளி முதல்வர் உஷாராமன் தலைமை வகித்தார். சர்வசமய பிரமுகர்கள் குத்துவிளக்கு ஏற்றினர்.
சர்வசமய கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன், இசை ஆசிரியர் ஜேசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா தொடங்கி வைத்தார். சர்வசமய கூட்டமைப்பு தலைவர் பி.டி. சிதம்பரம் தொடக்க உரையாற்றினார். பரசமய கோளரிநாத ஆதீனகர்த்தர் ல புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், திருஇருதய சபை அருட்சகோதரர் எம்.டி. ஜெபஸ்தியான், கம்பன் இலக்கிய சங்க பொருளாளர் எம்.ஏ. நசீர், சர்வசமய கூட்டமைப்பு துணைத் தலைவர் மரியசூசை ஆகியோர் கருத்துரை வழங்கினர். பள்ளி துணை முதல்வர் கங்காமணி நன்றி கூறினார். சர்வசமய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT