Published : 31 Oct 2021 03:12 AM
Last Updated : 31 Oct 2021 03:12 AM

அப்பல்லோ கே.எச். மருத்துவமனையில் - முழுமையான பக்கவாதம் சிகிச்சை தொடக்க விழா :

மேல் விஷாரம் அப்பல்லோ கே.எச்.மருத்துவமனையில் நடைபெற்ற முழுமையான பக்கவாதம் சிகிச்சை தொடக்க விழாவில் பக்கவாத விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர்.

வேலூர்

மேல்விஷாரம் அப்பல்லோ கே.எச் மருத்துவமனையில் முழுமையான பக்கவாதம் சிகிச்சை தொடக்க விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அப்பல் லோ கே.எச். மருத்துவமனையில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு மேம்படுத்தப்பட்ட மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையம் சார்பில் முழுமையான பக்கவாதம் சிகிச்சை தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சென்னை சிம்ஸ் மருத்துவமனை நரம்பியல் துறை இயக்குநரும் மூத்த மருத்துவ நிபுணருமான கே.ஆர்.சுரேஷ் பாபு பங்கேற்று "உயிர்காக்கும் நொடிகள்" என்னும் தலைப்பில் பக்கவாத விழிப்புணர்வு கை யேட்டை வெளியிட்டார். முதல் பிரதியை அமைச்சர் ஆர்.காந்தி, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

கே.எச். மேம்படுத்தப்பட்ட மூளை மற்றும் முதுகெலும்பு மையத்தின் தலைமை மருத்துவர் பசுபதிநாத் மிஸ்ரா பேசும்போது, ‘‘ஒருவருக்கு பக்கவாத அறிகுறிகள் அறியப்பட்ட 4 1/2 மணி நேரத்துக்குள் பக்க வாத சிறப்பு துறை உள்ள மருத்துவ மனைக்கு சென்றால் ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்துகளை செலுத்துவதால் முழுமையாக குணமாக்க முடியும்’’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அப்பல்லோ கே.எச் மருத்துவமனையின் தலைவர் மல்லக் ஹாசிம் சாஹிப், நிர்வாக இயக்குநர் மல்லக் அப்துல் வாஹாப் சாஹிப், மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பேராசிரியர் முஷ்டாக் அஹமது கான் உள்ளிட் டோர் பங்கேற்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x