Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM
புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுவையில் வரும் 1-ம் தேதி முதல் அடுத்தஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து நவம்பர் 14-ம் தேதிமுதல் 29-ம் தேதி வரை பாதயாத்திரை, தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. சமூக வலைதள பிரிவு தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT