Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1.05 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் அறிஞர் அண்ணாஅரசுக் கல்லூரி, எம்ஜிஆர் மகளிர் அரசுக் கல்லூரிகளில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
நேற்று இந்த புதியகட்டிடங் களை அமைச்சர்கள் க. பொன் முடி, கே.எஸ். மஸ்தான் ஆகியோர்பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத் தில் கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி மகளிர் கல்லூரியில் நடந்தது.
35 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1.05 கோடி நிவாரணத்தை அமைச்சர்கள் வழங்கினர்.
அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில்," கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண தொகை அளிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 140 மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றில் முதல்கட்டமாக ஏற்கெனவே 27 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2-வது கட்டமாக 35 குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ளது என்றார்.
ஆட்சியர் மோகன், எஸ்பி நாதா, எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், கல்லூரி முதல்வர்கள் சிவக்குமார், கணசேன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா, திமுக நிர்வாகிகள் ஜனகராஜ், புஷ்பராஜ், சக்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT