Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சிக்குட்பட்ட ஆனைவடபாதி பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய குழந்தைகள் மையக் கட்டிடத்தை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேற்று திறந்துவைத்தார். அப்போது, அவர் பேசியது:
இந்த புதிய கட்டிடத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் சாய்தள நடைபாதை, குழந்தைநேய கழிப்பறை வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. முன்னோடி திட்டத்தில் செயல்படும் இம்மையத்தின் வாயிலாக 303 குடும்பங்களிலுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT