Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM

நாகையில் காவலர்களுக்கான மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு :

நாகப்பட்டினம்: நாகை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கான மருத்துவ சிகிச்சை மையத்தை நாகை எஸ்.பி கு.ஜவகர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியது: காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல், சளி, தலைவலி, உடல் வலி, காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தடுப்பூசிகள் செலுத்தப்படும். மேலும், சர்க்கரை நோய், தோல் ஒவ்வாமை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் இந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த மையம் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x