Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து இருந்தனர். இதன் விவரங்கள், ஆணையத்தின் இணையதள பக்கத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினத் தொகை ரூ.30.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். அவர் தாக்கல் செய்த செலவின விவரத்தில், ரூ.27.39 லட்சம் செலவழித்துள்ளதாகவும், மொத்த தொகையும் தனது சொந்த பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் வானதி சீனிவாசன் ரூ.27.20 லட்சமும், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ரூ.24.13 லட்சமும் செலவழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT