Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM
ஈரோடு: ஈரோட்டில் நடந்த வங்கிகள் சங்கமம் நிகழ்ச்சியை, ஈரோடு எம்பி அ.கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசும்போது, வங்கியாளர்கள் பொதுமக்களின் மனுக்களை, உரிய முறையில் பரிசீலனை செய்து, தகுதியான நபர்களுக்கு கடன்களை விரைவாக வழங்க முன்வர வேண்டும். வங்கியாளர் சங்கமம் நிகழ்ச்சியில், பல்வேறு வங்கிகளின் சார்பில் 3112 நபர்களுக்கு ரூ.256 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்படுகிறது என்றார். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, கனரா வங்கி தலைமை பொது மேலாளர் பி.பழனிசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜி.திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT