Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள கார்த்திக் என்பவரின் குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் நேற்று விருத்தாசலம் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்று குடோனை சோதனை செய்தனர். அப்போது 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்து அவற்றை கடலூர் குடிமை பொருள் குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
அதே குடோனில் உரிய ஆவணங்களன்றி ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்ட போலீஸார் அவற்றையும் பறிமுதல் செய்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT