Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (சிஎஸ்ஐஆர்) 1942-ம் ஆண்டு செப்.26-ம் தேதி நிறுவப்பட்டது. அதன் 80-ம் ஆண்டு நிறுவன நாளையொட்டி இணைய வழியாக நாடு முழுவதும் வினாடி- வினா போட்டி நடந்தது. இதில், காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் நிரஞ்சன் முதலிடம் பெற்றார். 9-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ்குமார் 2-வது இடம் பெற்றார். அவர்களுக்கு காரைக்குடி சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் அங்கப்பன், பள்ளி ஆசிரியர் பிரிட்டோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT