சனி, நவம்பர் 16 2024
Last Updated : 29 Oct, 2021 03:11 AM
Published : 29 Oct 2021 03:11 AM Last Updated : 29 Oct 2021 03:11 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் ரேவதி விஜயா தலைமையிலான அதிகாரிகள் தஞ்சாக்கூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் வீட்டில் சோதனையிட்டனர். அங்கு 37 மூட்டைகளில் 1,368 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அரிசியை பறிமுதல் செய்தனர். போஸ் மீது குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் வட்ட வழங்கல் அலுவலர் புகார் கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT