Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று மனு வழங்க வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித்தர நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்கும் பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்களை இலவசமாக எழுதித்தர மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம் அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் மனுக்கள் எழுதித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT