Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டாறு, கிள்ளியூர் ஆகிய 6 வட்டங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களில் விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் இரு நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கெனவே 27-ம் தேதி நடந்த நிலையில் இன்றும் முகாம் நடைபெறுகிறது.
கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் ஏ வருவாய் கிராமத்துக்கான இசேவை மையம், பத்மநாபபுரம் பி கிராமத்துக்கான கல்குளம் தாலுகா வளாகம் ஆகியவற்றில் நடைபெற்ற முதல் கட்ட பட்டா திருத்த முகாமை குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT