Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.
பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் மாகீன் அபுபக்கர்தலைமை வகித்தார். கிராம கல்விக்குழு தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வரும் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் 6 மாதங்களாக செயல்பட்டு வரும் கரோனா பரிசோதனை மையத்தை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எடுக்காத பட்சத்தில் பெற்றோர் சார்பில் போராட்டம் நடத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை லிசம்மா பிலிப், ஆசிரியர் ஞானதாஸ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரஞ்சனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT