Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM
வேலூர், இறைவன்காடு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் 30-ம் தேதி (நாளை) மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதிய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் நகரம், பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண் பாக்கம், வல்லண்டராம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தநேரி, மருதவல்லிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்’’ என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT