Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் மூலம்மட்டுமின்றி, விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களைஐஆர்சிடிசி செயல்படுத்தி வருகி றது. அதன் ஒருபகுதியாக, வரும்டிசம்பர் 17-ம் தேதி கோவையில்இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் ஹைதராபாத் நகரத்தின் வரலாற்றை சிறப்பிக்கும் கோல்கொண்டா கோட்டை, சார்மினார், மக்கா மஸ்ஜித், சாலர்ஜங்அருங்காட்சியகம், லும்பினி தோட்டம், ராமோஜி சினிமா நகரம் ஆகிய இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 இரவு, 3 பகல் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.15,595 கட்ட ணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விமான கட்டணம், ஏசி ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகன போக்குவரத்து, சுற்றுலா வழிகாட்டி, உணவு ஆகியவை அடங்கும். இந்த சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி கோவை அலுவலகத்தை 9003140655, 8287931965என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.irctctourism.comஎன்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஐஆர்சிடிசி தெரிவித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT