Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM
ராமேசுவரம்: உச்சிப்புளியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோயில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை கைவிடக் கோரி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உச்சிப்புளியில் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டபம் இந்து முன்னணி ஒன்றியத் தலைவர் காளிஸ் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் ராஜகுரு பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பழநி:
பழநி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் தலைமை வகித்தார்.தங்க நகை உருக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT