Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM
தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கார்த்தி சிதம்பரம் எம்பி அனுப்பிய கடித விவரம்:
ராமேசுவரம்- பெங்களூருவுக்கு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். பாலக்காடு-திருச்சி விரைவு ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
தாம்பரத்தில் இருந்து திரு வாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானா மதுரை, அருப்புக்கோட்டை வழி யாக செங்கோட்டை வரை புதிய பகல்நேர அந்தியோதயா ரயில் இயக்க வேண்டும்
திருவாரூரில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, மானா மதுரை வழியாக மதுரைக்கு புதிய பயணிகள் ரயில், சென்னை- நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை பழையபடி திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்க வேண்டும். மேலும் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு திருப்பத்தூர் வழியாக புதிய வழித்தடம் அமைக்க வேண்டும்.
காரைக்குடியில் இருந்து தேவகோட்டை, ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய வழித்தடம், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர், நத்தம் வழியாக திண்டுக்கலுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். மணப்பாறையில் இருந்து பொன்னமராவதி, திருப்பத்தூர், காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு புதிய வழித்தடம், மதுரை - தொண்டி துறை முகத்துக்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT